மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் – முதலமைச்சர் அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்று பெயர் மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.