அண்ணா நினைவு நாள் – சிறப்பு வழிபாடு, பொது விருந்துக்கு அனுமதி இல்லை!
அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதாலும், நாளை பேரறிஞர் அண்ணா நினைவு நாள் என்பதாலும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.