‘அண்ணா திராவிட கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறக அ.தி.மு.க ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. இதில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இதன் பின் ஓபிஎஸ் துணை முதல்வராக்கப்பட்டார்.
இதனையடுத்து தனித்து விடப்பட்ட சசிகலா தரப்பில் இருந்து தினகரன் அந்த அணியை வழிநடத்தினார். அவர் ஆர்கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். மேலும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். அதன் கொடியில் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தன. மேலும் கொடியின் நடுவே ஜெயலலிதாவின் படம் இருந்தது. அதன் பிறகு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் தினகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஊடகங்களில் குறை சொல்லிக்கொண்டனர். சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவும் தினகரன் பக்கம் இருந்தது. இதனால், “இனி சசிகலாவை அக்கா என்று கூறமாட்டேன்” என்று திவாகரன் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் மன்னார்குடியில் புதிய கட்சி ஒன்றை இன்று துவங்கினார். அதற்கு ‘அண்ணா திராவிட கழகம்’ என பெயர் வைக்கப்பட்டது. இக்கட்சியின் கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களும் கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரமும் உள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளராக தானே செயல்படுவேன் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…