அங்கித் திவாரி ஜாமின் மனு 2-வது முறையாக நிராகரிப்பு..!

Ankit Tiwari

அரசு மருத்துவரிடம் லஞ்சம்  வாங்கிய புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை  இரண்டாவது முறையாக திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1 -ம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரல் கைது செய்யப்பட்டார். சுரேஷ் பாபுவிடம்  முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார்.

கர்நாடக முதல்வருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!

பின்னர் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அங்கித் திவாரி  மீண்டும் ஜாமீன் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அரசு மருத்துவரிடம் லஞ்சம்  வாங்கிய புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை  2-வது முறையாக திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்