அங்கித் திவாரி வழக்கு.. ED மனு தள்ளுபடி..!
சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1 -ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார்.
15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
துணை வேந்தரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..!
இதற்கிடையில் அங்கித் திவாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை சாா்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 3-முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறையின் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கித் திவாரியம் காவலில் எடுத்து விசாரிக்க கூடிய அமலாக்கதுறையின் மனு தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.