அனிதா பெயர் சூட்டுவது ஆறுதல் தருகிறது – திருமாவளவன் பேச்சு
அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டுவது ஆறுதல் தருகிறது என திருமாவளவன் பேச்சு.
அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருமாவளவன் பேச்சு
இந்த நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், அரியலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள, புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்டுவது ஆறுதல் தருகிறது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் வந்திருப்பது, அரியலூர் மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.