கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம் என சீமான் ட்வீட் செய்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்றாலே இந்தியா முழுவதும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாணவி அனிதா உயிரிழந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், பலர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம். தங்கையின் நினைவைப் போற்றும் இந்நாளில் கல்வியை மாநில பட்டியலுக்கு மீட்டு கொண்டுவர உறுதியேற்போம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள், பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…