சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் நேற்றுஆய்வு செய்தாா். அப்போது மஞ்சுவிரட்டு திடல், பாா்வையாளா் மாடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிராமணம்பட்டி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் திடீரென ஆய்வு செய்தார். அங்கு எழுத்த எழுதப்பட்டிருந்த திட்ட மதிப்பீடு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த திட்ட மதிப்பீடு பலகையில் “ஊரக வளர்ச்சி”என்பதற்கு பதிலாக “ஊராக வளர்ச்சி” என்றும், “உள்ளாட்சி” என்பதற்கு பதிலாக “ஊள்ளச்சி ” என்றும், “மானியம் ” என்பதற்கு பதிலாக மணியம் என எழுதப்பட்டிருந்தது.
ஒரே நாளில் அரசுப் பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம் ..!
இதை பார்த்த அமைச்சர் யார் இவ்வளவு பிழையுடன் எழுதியது என ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து கேட்டார். அப்போது ஒப்பந்தக்காரர் தான் இவ்வளவு பிழையுடன் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உடனே அமைச்சர் எவனா இருந்தாலும் கட்டி வையுங்கள் என கோபமாக பேசினார்.பின்னர், இந்த திட்ட மதிப்பீடு பலகையை மாற்றி எழுதி போட்டோ அனுப்புங்கள் என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…