அங்கொட லொக்கா வழக்கில் கைதான மதுரை வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இலங்கையின் நிழல் உலக தாதா என கூறப்படும் அங்கொட லொக்கா கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள சேரன்மாநகர் பகுதியில் தங்கி உள்ளார். கடந்த மாதம் 3-ம் தேதி அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அங்கொட லொக்காவின் உடலை அவரது காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் மதுரையில் போலி ஆவணங்கள் வைத்து ஆதார் அட்டை தயாரித்து உடலை எரித்தனர்.
போலியான ஆவணங்கள் மூலம் உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், இந்த வழக்கு பீளமேடு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கொட லொக்கா காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும் அடைக்கப்படுள்ளனர். கோவை சிறையில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமினில் விடுவிக்க கோரி வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான உத்தரவு வருகின்ற 24-ம் தேதி(அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் ஜாமீன் மனுவை கோவைக்குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…