மீண்டும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி.! அரசு அதிரடி அறிவிப்பு.!
மீண்டும் அரசு பள்ளிகளில் அங்கன்வாடிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு துவக்கபள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டுப்பாடு சமூகநலத்துறை வசம் சென்றுவிட்டது என பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் செயல்பட்டு அந்த அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் மொத்தமாக செயல்பட்டு வந்த 2,381 அங்கன்வாடிகள் மீண்டும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும், அவர்களுக்கு பிழைப்பு ஊதியமாக 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும் எனவும், இவர்களின் வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை என மழலைகளுக்கு பாடம் நடத்துவர். இவர்கள் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி பாடத்திட்டங்களை நடத்த அறிவுறுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.