ஆண்டி-இந்தியன்,ஹெச்.ராஜா குரல் கேட்கவும் ரிமோட்டை உடைக்கும் கமல்ஹாசன்! வைரலாகும் வீடியோ
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
அதேபோல் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.
பின்னர் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
https://twitter.com/ikamalhaasan/status/1116654132574609408
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,பிரதமர் மோடி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரது குரல்கள் கேட்கின்றன.இறுதியாக ஹெச்.ராஜா ஆண்டி-இந்தியன் என்று சொல்லும் குரல் கேட்கிறது. உடனே ஆத்திரம் அடைந்த கமல்ஹாசன், ரிமோட்டை வீசுகிறார்.பின்னர் டிவியை உடைக்கிறார்.பின்னர் அவர் பேசுகையில் ,முடிவு பண்ணீட்டங்களா? யாருக்கு ஓட்டு போடப்போறீங்க… குடும்ப அரசியல் பண்ணி நாட்டேயே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா, நம்ம உரிமைக்காக போராடிய நம்மள அடிச்சு துரத்துனாங்களே அவங்களுக்கா.கார்பரேட் கை கூலியாக மாறி, நம்ம மக்களையே சுட்டு கொலை செய்தார்களே அவங்களுக்கா,அனிதாவின் அப்பா, அம்மாவிடம் கேளுங்கள் யாருக்கு வாக்கு பதிவு செய்யவேண்டும் என்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள்’ என்று பேசியுள்ளார்.