தமிழக அரசை ரிமோட் மூலம் இயக்கி வருகிறது பா.ஜ.க அரசு…!சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதல்வர் கடும் தாக்கு …

Published by
Venu

ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,அனைவருக்கும் வணக்கம்”.தென் பாராதமே மிகவும் பெருமைப்படும் நாள் இது. இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதி திருவுருவச் சிலை, சென்னை நகரத்தில் திறந்து வைத்துள்ளோம். இவ்விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
தமிழ் அருமையான மொழி. தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.கலைஞரின் வாழ்வும் பணியும் தமிழக இளைஞருக்கு உந்து சக்தியாக இருக்கிறது.நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர், 80 ஆண்டு கால அரசியலில் ஈடுபட்டவர் கலைஞர். 50 ஆண்டுகள் திமுக தலைவராக திகழ்ந்தவர். எந்த தேர்தலிலும் தோற்காதவர் கலைஞர்.
பா.ஜ.க அரசு அனைத்து அரசு அமைப்புகளையும் அழித்து வருகிறது. இங்கு யாரும் பா.ஜ.க ஆட்சியை விரும்பவில்லை. தமிழக அரசை ரிமோட் மூலம் இயக்கி வருகிறது பா.ஜ.க அரசு.தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் யாராவது நன்மை அடைந்து உள்ளார்களா…..பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன். திமுகவை வெல்ல வைப்பதே கலைஞருக்கு செய்யும் நன்றி என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
 

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago