ஆந்திர விஷவாயு விபத்து – தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
ஆந்திர விஷவாயு விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக கீழே விழுந்தனர்.இதில் 11 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அந்த பகுதி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பிரதமர் ,குடியரசு தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஆந்திராவில் விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி வேதனையும், துயரமும் அளிக்கிறது .விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.