அகரம் அகழாய்வில் 256 செ.மீ ஆழத்தில் தொன்மை வாய்ந்த சுடுமண் முத்திரை கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தொன்மையான சுடுமண் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல்பகுதி உட்குழிவுள்ள உருளை வடிவம் கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட மூன்று பிரிவுகளைக் கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்களுடன், அதன் நடுவே சில புள்ளிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கீழும் பக்கவாட்டிலும் தலைப் பகுதியிலும் சிறிது சேதமடைந்துள்ளதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி நன்கு வழுவழுப்பாகவும், அடிப்பகுதி சொரசொரப்பாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…