அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வருமான விவரத்தை படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.இந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினா் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த சோதனையில் ‘பிகில்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் தான் நிதி உதவி செய்திருப்பது தெரியவரவே அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினா் அதிரடி சோதனை நடத்தியது.மேலும் படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகய் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து வருமானவரித்துறை விசாரித்தது.சென்னை மற்றும் மதுரையில் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில்ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனைகள் படிப்படியாக நிறைவடைந்தது.
ஆனால் ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட், கல்பாத்தி எஸ் அகோரம் இல்லம் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகம் என பல இடங்களில் நான்கு நாள்களாக நடைபெற்று வந்த சோதனையின் முடிவில், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததாக தெரிகிறது.
மேலும் பைனான்சியரிடமிருந்து மட்டும் கட்டுகட்டாக பணம் மற்றும் 2 பைகள் அடங்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவருடைய வீட்டில் இருந்து 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…