இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.இந்த கூட்டணியில் பாஜக ,பாமக,புதிய தமிழகம்,தேமுதிக ,புதிய நீதிக்கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது.
தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,அதிமுக கூட்டணியில் உள்ள பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கப்பட்டது.
இன்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…