புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்கள் வெளியிட வேண்டும்!
கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆணை செல்லாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது – அன்புமணி ராமதாஸ்.