விமான கட்டணம் 3,300 ருபாய்.! ஆம்னி பேருந்து கட்டணம் 3,700 ரூபாய்.! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.!
கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. இதனை அரசு குறைக்க நடவடிக்கை வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ‘ நேற்று ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து சட்டமசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு உடனடியாக ஆளுநர் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட வேண்டும். ‘ என கோரிக்கை வைத்தார்.
மேலும், ‘ தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது போதாது. போதை தடுப்பு பிரிவுக்கு சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் போலீசார் தேவைப்படுவர். ஆனால் தற்போது 500 போலீசார் மட்டுமே இதில் செயல்பட்டு வருகின்றனர். இதனை இன்னும் அதிகரிக்க வேண்டும். ‘ என தெரிவித்தார்.
மேலும், ‘ பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. ‘ என குற்றம் சாட்டினார். ‘ இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் .