இ – சிகரெட்டுகள் விற்பனையை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களிலும், பொழுதுபொற்க்கு மன்றங்களிலும் தலைவிரித்தாடும் இ – சிகரெட்டுகள் விற்பனை.
தமிழகத்தில் சட்டவிரோத இ – சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகள் ஏற்படுத்தும் இ – சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் போதிலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களிலும், பொழுதுபொற்க்கு மன்றங்களிலும் தலைவிரித்தாடுக்கின்றன.
இ – சிகரெட்டுகளில் உள்ள பிரோப்பிலின் கிளைக்கோல் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மனிதர்களுக்கு பலவகையான புற்றுநோய், இதய நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. இதனால் தமிழ்நாட்டில் சட்டவிரோத இ – சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.