முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

Default Image

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உலகில் உள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டது கும்பகோணம்.150 ஆண்டுகளுக்கு முன் 1868 ஆம் ஆண்டிலேயே கும்பகோணம் தலைநகரமாக திகழ்ந்துள்ளது. மாவட்ட தலைநகரத்திற்கு தேவையான கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிலங்கள் கும்பகோணத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் ஏராளமாக உள்ளன.

கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கு இதைவிட தகுதிகள் தேவையில்லை. தமிழ்நாட்டிலும் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட
நிர்வாகம் மேம்படும்; உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதில் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சராகிய தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்