விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவினர் பாமகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோரிக்கை வைத்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 13இல் வெளியாக உள்ளது . தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் ராஜா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக , தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அதிமுக, தேமுதிக போட்டியிடாத சூழலில், விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவினர், அதிமுக மற்றும் தேமுதிக கட்சியினரின் வாக்குகளை பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மேடையில் இருந்த பேனர் புகைப்படத்தில் பிரதமர் மோடி அண்ணாமலை ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
இந்த பிரச்சார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், அதிமுக, தேமுதிக ஆதரவாளர்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நமக்கு எல்லாம் பொது எதிரி திமுக. இந்த இடைத்தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என கேட்டுகொண்டார்.
முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்து அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது. அதில், திருமங்கலம் , ஈரோடு இடைத்தேர்தல் போல இந்த இடைத்தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்காது என குறிப்பிட்டு இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூட மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார். மேலும் எங்களை (அதிமுக) போல மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணித்து இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த விவகாரம் தெரியவந்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து இருப்பார்கள் என்று தனது கருத்தை முன்வைத்தார்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…