இந்த மாதிரியான இடஒதுக்கீடு தான் பெரியாரின் விருப்பம்.! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.!

Default Image

தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது.  அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

இடஒதுக்கீடு குறித்து பாமக தலைவருமான மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இடஒதுக்கீட்டை 81 விழுக்காடு உயர்த்தியுள்ளார். அது வரவேற்க்கதாக்கது. அதில், பழங்குடியினருக்கு 20 முதல் 32 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக நான் வரவேற்கிறேன்.

உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேலே இடஒதுக்கீட்டில் உயர்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.  மத்திய அரசு  இது குறித்து சட்டம் கொண்டு வரவேண்டும். இப்போதும் எந்த தடையும் இல்லை. இருந்தாலும் சட்டம் வந்தால் இடஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது.  அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இதுதான் பெரியார் நினைத்த இடஒதுக்கீடு.

அதில், பிராமணர்களுக்கு , ரெட்ட்டயர், செட்டியார், நாடார், தேவர், வன்னியர் என அனைவருக்கும் இடத்தை ஒதுக்கிவிடுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்அன்புமணி ராமதாஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்