பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல்.
கடந்த 10 நாட்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சையா பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பாமக கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து, அவரது, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் என்று கூறியுள்ளார். மக்களவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர். தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…