அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அன்பு ஜோதி இல்லத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களுக்கு போதைப்பொருள் தந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டலப்புலியூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜோபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.