அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம் – 4 தனிப்படை அமைப்பு!
ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக 4 தனிப்படை போலீசார் பெங்களுருவில் உள்ள ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தொடங்குவார்கள் என தகவல்.
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஎஸ்பி, ஆசிரமத்தில் நடந்த சோதனையில் ஆவணங்கள், 8 செல்போன்கள் மற்றும் 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த மருந்துகள், சிகிச்சை விவரங்களையும் கைப்பற்றியுள்ளோம் என்றும் 4 தனிப்படை போலீசார் பெங்களுருவில் உள்ள ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தொடங்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே குண்டல புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல், அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, காப்பகத்தின் நிர்வாகி மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.