12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து நேற்று மத்திய அரசு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக நடைபெறும். தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான். தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிப்பதாககூறியுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…