திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வாலாஜா பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் .மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் .தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு – பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் – கொள்ளையடிப்பதற்காகவே உறவினர்களுக்கு டெண்டர் என அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு என்று பேசியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…