அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலில் சிபிஐ, சிபிசிஐடி என புலனாய்வு பிரிவினர் விசாரித்தும் குற்றவாளி யார் என தகவல் கிடைக்கப்பெறவில்லை.
இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வந்தது. இதில், இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வருகையில், அரசு தரப்பில் வாதிடுகையில் இதுவரை 1040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதனை ஏற்று விரைவில் வழக்கை முடித்துவைக்க வேண்டும் எனவும், விரைவில் வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…