13ஆண்டுகளுக்கு முன் அரசியல் குறித்த கேள்விக்கு விஜய் சொன்ன பதில்?
நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் எனவும் விஜய் அறிக்கையின் மூலம் அறிவித்து இருந்தார்.
மேலும், நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், அவர் 13ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பழைய வீடியோவும் வைரலாகி வருகிறது.
“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!
அந்த வீடியோவில் நடிகர் விஜய் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரிடம் அரசியலில் களமிறங்குவது பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ” அதற்கான காலம் வரும் வரும்போது நான் கண்டிப்பாக. இப்போது அது சரியான நேரம் இல்லை நான் நடிக்க வருவதற்கு முன்பு எனக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும்.
மக்கள் என்னை இவ்வளவு பெரிய இடத்தில அமர வைப்பார்கள் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. காலம் என்னை இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று சொல்வேன். அதை போலவே, இன்னும் சில ஆண்டுகளில் நான் அரசியலுக்கு வரும் காலம் கண்டிப்பாக வரும் என்று நினைக்கிறேன். இது சரியான நேரம் இல்லை.
அரசியலில் என்ட்ரி ! சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் அறிவிப்பு!
இப்போது என்னுடைய மனதில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்பது தான். அரசியல் விளையாட்டு இல்லை விளையாட்டாக நான் வருகிறேன் என்று சொல்ல முடியாது. விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் காலம் அமையும் போது அரசியலுக்கு வருவேன் என்று சூசகமாக தெரிவித்தார்.