திண்டுக்கல்லில் பயங்கரம்.! நாயை ‘நாய்’ என்று கூறியதால் முதியவர் கொலை.! கொலையாளி தலைமறைவு.!
திண்டுக்கல் பகுதியில் நாயை நாய் என்று குறிப்பிட்டதால் முதியவரை ஒருவர் கொலை செய்துள்ளார். இதில் கொலையாளி தலைமறைவாகி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே டேனியல் ராஜா என்பவர் செல்லமாக தன் வீட்டில் ஒரு நாய் வளர்ந்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் ராயப்பன் எனும் 65வயது முதியவரும் வசித்து வந்துள்ளார்.
ராயப்பன், தனது பேர குழந்தைகளிடம் அந்த பக்கம் போகாதீங்க நாய் கடித்துவிடும் என கூறியுள்ளார். அதனை கேட்ட டேனியல் ராஜா, நாங்கள் அதனை செல்லமாக எங்கள் வீட்டு குழந்தை போல வளர்த்து வருகிறோம். அதனை எப்படி நாய் என்று கூறலாம் என தகராறு செய்து அந்த தகராறு முற்றி ராயப்பனை டேனியல் ராஜா குத்தி கொன்றுள்ளார்.
கொலையாளி டேனியல் ராஜா தலைமைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியல் ராஜாவை தேடி வருகின்றனர்.