மது போதையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு உறங்கிய முதியவர்!பின்னர் நடந்த விபரீதம்!
- மது குடித்த போதையில் முதியவர் ஒருவர் உல்லாசம் அனுபவித்துவிட்டு உறங்கிய முதியவர்.
- குற்றவாளியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவருகினற்ன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இருக்கும் அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் சுடலை ராஜன்.இவரது மனைவி இசக்கி ஆவார்.இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்கின்றன.இதன் காரணமாக சுடலை ராஜன் தனது மகளுடன் தனது தந்தை மாரி மற்றும் தாய் மகாலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுடலை ராஜனின் தந்தை மாரி தனது பேத்தியை அழைத்து கொண்டு பழனி கோவிலுக்கு சென்றுள்ளார்.அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் ஆதரவற்றவர் என்றும் தன்னை அழைத்து சென்றால் குழந்தையை நன்கு பார்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மாரி அந்த பெண்ணை தமது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அப்போது வரும் வழியில் மது பாட்டிலையும் வாங்கி வந்த மாரி அதை குடித்து அந்த பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் போதையின் காரணமாக நன்கு உறங்கியுள்ளார்.அந்த நேரத்தில் சுடலை ராஜன் வீட்டில் இல்லை வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் எழுந்து பார்க்கும் போது அந்த பெண்ணும் தனது பேத்தியையும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எங்கு தேடியும் இருவரும் இல்லாததால் மாரி தனது மகன் சுடலை ராஜனுக்கு தகவல் அளித்துள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்த சுடலை ராஜன் தந்தையை திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அங்குள்ள சி சி டிவி கேமராவை ஆய்வு செய்த போது பெண் ஒருவர் குழந்தையை அழைத்து செல்லும் வீடியோ பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குழந்தையை அளித்து செல்லும் அந்த பெண்மணி யார் என்று தனிப்படை அமைத்து குழந்தையை காவல்துறையினர் தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.