தீபாவளி முடிந்த பின் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது -அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2,29,905 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கான பணி பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க பணியாளர்களுக்கான குறைதீர் புலம் portal and app இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்.
அதன்பின், அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் சமயங்களில் வரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்த பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அப்போது தான் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும். ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை
கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.
ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் கோரிக்கையை பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம் ஆசிரியர்களுக்கான செயலியில் வரும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். புதிய செயலி மூலம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.