kalaignar kanavu illam thittam (1) [File Image]
சென்னை : தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்து, ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, 2024-25-ம் நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 5-ம் தேதிக்குள் பணியாணை வழங்கவும், பயனாளிகளை வரும் 25ஆம் தேதிக்குள் தேர்வு செய்யவும், இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும். 300 சதுர அடி RCC கூரையுடன், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும்.
வீட்டுச் சுவர்கள். நாட்டுச் செங்கற்கள் (Country Bricks), சாம்பல் செங்கற்கள் (Fly Ash bricks), திட பிளாக்குகள்(Solid Blocks), இன்டர்லாக் பிளாக்குகள் (Inter locking ரசிசி பிளாக்குகள் (ACC blocks) ஆகியவை மற்றும் சிமெண்ட் கலவை பயன்படுத்தி
கட்ட வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் மண் கலவை பயன்படுத்தக் கூடாது மண்கவர் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. செலவு குறைந்த மற்றும் விரைவான கட்டுமான தொழில் நுட்பம் இத்திட்டத்தில் அனுமதிக்கப்படலாம். இத்திட்டத்தின் கீழ் பயனுள்ள தொழில்நுட்பம் மற்றும் விரைவான கட்டுமானமும் அனுமதிக்கப்படும்.
கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ 3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் பயனாளியின் பெயருடன் தனிச்சிறப்பு வர்ணம் அடிக்கப்பட வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் சுவரிலும் டத்தின் பெயர் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் பயனாளியின் பெயர் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மறுகணக்கெடுப்பு மற்றும் புதிய குடிசை வீடுகள் பட்டியல் TNRD இணையதளத்தில் உள்ளன. மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள குடிசை வீடுகளின் விவரமும் TNRD இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. இத்தரவு அறிக்கைகள் மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மறுகணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்று குடிசை வீடுகளில் வழங்கப்படவேண்டும். தற்போது வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இம்மூன்று கணக்கெடுப்பு பட்டியல்களிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்களுக்கு கூடிய வரையில் முழுமையாக நிறைவு செய்யும் வகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
இக்கணக்கெடுப்பு பட்டியல்களில் இடம்பெறாத தகுதியுடைய குடும்பம் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவ்வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு விடுபட்டதகுதியான குடும்பங்கள் இணைய தரவுத் தளத்தில் சேர்க்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஆண்டுகளில் வீடுவழங்க பரிசீலிக்கப்படும்.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…