உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!
இந்தியாவில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளை பயில நீட் எனும் பொது நுழைவு தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் பதியப்பட்டன. தற்போது கூட நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்க போராட்டத்தை ஆளும் திமுக அரசு ஆரம்பித்தது.
இந்த நீட் தீர்வு காரணமாக, அதில் தோல்வி அடைந்த மாணவ , மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கட்சி பேதம் தவிர்த்து பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கோரிக்கைகள் வைத்து வருகினறன.
உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டன கருத்தையும் பதிவிட்டுள்ளார். நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து, தனது வருத்தத்தை அதில் பதிவிட்டுள்ளார். மாணவி பைரவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.