தருமபுரி மாவட்டத்தில் உணவு தேடிவந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதமாக மக்னா எனும் யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களின் வயல் பகுதியில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதில் மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர்.
பிறகு அந்த ஆண் யானை மட்டும் அங்கிருந்த கிராம பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து, அந்த யானை கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி கிராமத்தில் நுழைந்த நிலையில், ஏரிக்கரையின் மீது ஏறும்பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசியது.
மின் கம்பி உரசியதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அந்த யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் உடலை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். யானையை மின்சாரம் தாக்கிய அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதைப்போல கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூன்று யானைகள் மின்வேலியில் சிக்கி பரிபதாபமாக உயிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…