வாய் பேச முடியாத மூதாட்டிக்கு இரத்த தானம் செய்த கண் தெரியாத அரசுப்பள்ளி ஆசிரியர்!

வாய் பேச முடியாத மாற்று திறனாளியான மூதாட்டிக்கு இரத்த தானம் செய்த, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா. இவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு அவசியமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தன்னார்வ அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் இந்த செய்தியை பதிவிட, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா அந்த மூதாட்டிக்கு ரத்தம் அளிப்பதற்கு முன் வந்துள்ளார்.
இதனையடுத்து, சிவா அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளார். சிவாவின் இந்த உதவும் மனதை பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி ரத்ததான சான்றிதழை வழங்கி பாராட்டி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025