மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் கலைஞர் அரங்கம் அமைக்கப்படும் – முதல்வர் மு. க.ஸ்டாலின்
மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, சிறையில் இருந்த போது காவல்துறையின் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினேன் என முதல்வர் பேச்சு.
சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில கல்லூரியின் அரசியல் அறிவியல் படித்தேன்.
மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். நெருக்கடி நிலையின் போது, சிறையில் இருந்த போது காவல்துறையின் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் ‘கலைஞர்’ பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.