வாக்குவாதத்தில் இருந்து மோதலுக்கு மாறிய சம்பவம்.! இளைஞர் மீது கட்டையால் தாக்குதல்.!
- சென்னையில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு ஆய்வாளருக்கு இடையே வாக்குவாதத்தில் இளைஞர் மீது ஆய்வாளர் கட்டைக்கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஓட்டேரி அருகே புளியந்தோப்பு போக்குவரத்துக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்தர் என்பவரை வளைத்து பிடித்தார். அந்த நேரத்தில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அபராதம் விதிப்பதாகக் போக்குவரத்து சிறப்பு அதிகாரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஆய்வாளர் ரமேஷ், சுரேந்தரை கட்டையை கொண்டு தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுரேந்தருக்கு தலையில் ரத்தம் கொட்டியபடி இருந்ததை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஆய்வாளரை தாக்க முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி, சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து இளைஞர் சுரேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.