3 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்! நெஞ்சுவலியால் துடித்தவர் உயிரிழந்த பரிதாபம்!

Published by
லீனா

3 மணி நேரம் தாமதமாக வந்ததால், நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு வயது 65. இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் வேலைக்கு செல்லாத நிலையில், இரவு குடும்பத்தினருடன் அமர்ந்து, உணவு  சாப்பிட்டுக்கொண்டு இருந்த இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். தொடர்ந்து 10-ற்கும் மேற்பட்ட முறை அழைப்பு விடுத்தும் வராத நிலையில், அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் 3 மணி நேரம் கழித்து 108 வந்துள்ளது. ஆம்புலன்சில் உள்ளவர்கள் பிரகாஷை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதனையடுத்து ஆம்புலன்ஸை முற்றிகையிட முயன்ற பொதுமக்களை, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். கொரோனா சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற அவசரமான சூழ்நிலைக்கு அம்புலன்ஸ் வருவதற்கு மறுப்பதால், அரசு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

15 minutes ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

24 minutes ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

40 minutes ago

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

1 hour ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

2 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

3 hours ago