#BREAKING: பெத்தேல் நகர் மக்களுக்கு மாற்று இடம் – தமிழக அரசு ..!
பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், பெத்தேல் நகரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான மின் கட்டணம், வீட்டு வரி செலுத்தி பல ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறி ஆக்கிரமிப்புகளை இடிக்க விடாமல் குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னையில் பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.