காவிரி விவகாரம்.! அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.!
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக நாளை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடாக அரசு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்கற்று வாரியம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு . மேலும் ஒருநாளைக்கு 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் திறந்து விடுவதாக கூறியது. இதனை அடுத்து, வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று வாரியம்,காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்ப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளின் உத்தரவை மீறுவது என்பது உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவது போல ஆகும்.
கடந்த ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு நீரை திறந்துவிடவில்லை. அதனால், உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றோம். அதே போல இந்தண்டு தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் இருந்துதிறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. ஒருநாளைக்கு 1 டிஎம்சி தண்ணீரையும் திறந்துவிட மறுக்கிறது. கர்நாடகாவில் 4 முக்கிய அணைகளில் இருந்து 75,586 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால், தமிழக மேட்டூர் அணையில் தற்போது 13 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.