மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளது -அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், பிற மாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்தவ கல்லூரிகளில் சேர்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளது .மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.