பெரம்பலூரில் பரிதாபம்.! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது நேர்ந்த கோர விபத்து.! 3 பேர் பலி.!
பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் ஒன்று முந்தி செல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்கள் மீது பேருந்து மோதி ஏற்பட்ட உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.