விளம்பர பதாகை மோதி விபத்து : பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!
சென்னை : திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் அப்துல் சாஜித் என்பது தெரிய வந்துள்ளது. அப்துல் சாஜித் பெற்றோரிடம் அடம்பிடித்துக் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதியதாக பைக் ஒன்றை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இதற்கு முன்னதாகவும் அப்துல் சாஜித் விபத்தில் சிக்கியுள்ளார். ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட பைக் விபத்தில் கோமா நிலையில் இருந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்தான் குணமடைந்துள்ளார்.
இந்த சூழலில், திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் அருகே இன்று சென்று கொன்டு இருந்த நிலையில், முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தார்.