விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.! அமுதா ஐ.ஏ..எஸ் இன்று விசாரணை.!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பான விசாரணையை அமுதா ஐஏஎஸ் இன்று துவங்குகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்தது.
பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் :
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சர் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மனித உரிமை ஆணையத்திலும் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
பணியிடை நீக்கம் :
இருந்தும் காவல் உதவி காவல் கண்காணிப்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்த நிலையில், பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆயுதப்படை :
மேலும், அவருடன் பணியாற்றி வந்த ராஜ்குமார், சந்திரசேகரன், ராஜகுமாரி, பெருமாள், சக்தி நடராஜன், சந்தானகுமார், மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
அமுதா ஐ.ஏ.எஸ் :
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அரசு வெளியிட்டது.
இன்று ஒருநாள் :
அதன்படி ஏப்ரல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை மேற்கொள்ள உள்ளார். நேரில் வந்து புகார் அளிக்க விரும்புவோர் அங்கு வந்து ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.