தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர்- மு க ஸ்டாலின்..!
கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஒரு அழிக்க முடியாத சிற்பமாக தான் உள்ளது, இவர் சிறந்த பாடலாசிரியர் என்ற விருதை 7 முறை வாங்கியுள்ளார், இவர் கடந்த 1980ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற படத்தில் பொன்மாலை பொழுது என்ற பாடலை முதன் முதலாக எழுதினார், அதன் பிறகு 2009ம் ஆண்டு வரை, சுமார் 5800 பாடல்கள் எழுதியுள்ளார், முன்பு இசைஞானி உடன் கூட்டணி வைத்து கொண்டார் அதன் பிறகு இசை புயல் ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி வைத்து கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு இன்று கவிஞர் வைரமுத்துவிற்கு 67வது பிறந்தநாள், இவருடைய பிறந்த நாளிற்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் வைர முத்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றார்கள், அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர். ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப் படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர்!
ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப்
படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!— M.K.Stalin (@mkstalin) July 13, 2020