அமோனியம் வாயு கசிவு…இழப்பீடு வழங்க முடிவு..?

எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் சமீபத்தில் அமோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். அமோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

3 ஆண்டுகள் சிறைதண்டனை.! தப்புவாரா பொன்முடி.? இன்று விசாரணை.!

இதைத்தொடர்ந்து, அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு  உத்தரவிட்டது. வாயு கசிவு தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தனி செயலாளர் தலைமையில் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், எண்ணூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமோனியம் வாய்வு கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு ஓரின நாட்களில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1