கோவை கிரமத்தில் பரவிய அம்மோனியா வாயு.! 300 குடும்பங்கள் உடனடி வெளியேற்றம்…

Ammonia Gas

Ammonia gas leaked : கோவை காரமடை அருகே ஓர் கிரமத்தில் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே, சென்னிவீரம்பாளையம் எனும் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்பு ஓர் சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் அவிநாசியை சேர்ந்த ஆஷிக் முகமது என்பவருக்கு கொடுக்கப்பட்டு உருளை சேமிப்பு கிடங்காக செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், உருளை சேமிப்பு கிடங்கில் உள்ள அம்மோனியா வாயுவானது நேற்று (திங்கள்) இரவு 11 மணி அளவில் லீக் ஆகி வெளியேற தொடங்கியுள்ளது. இந்த வாயுவானது சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் புகுந்ததால், அங்குள்ள சிலருக்கு மூச்சி திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்துள்ளது.

உடனடியாக ஊரக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் , நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அம்மோனியா வாயு வெளியேறுவதை தடுக்க முயன்றனர். அப்போது, ஊரக காவல்துறையினர் உதவியுடன், கிராமத்தில் உள்ள சுமார் 300 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கிரமத்தில் இருந்து சும்மார் 800 மீட்டருக்கு அப்பால், உள்ள ஓர் மண்டபத்தில் நள்ளிரவுக்குள் மக்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர் . மேலும், தேவையான மருத்துவ உதவிகளும் கிராமத்தினருக்கு வழங்கப்பட்டன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்