அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது – தடைகோரி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி இடையே நீண்ட நாட்களாக வார்த்தை நடைபெற்று வந்தது.இறுதியாக கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி நீக்கிவிட்டு கர்நாடக மாநிலத்தின் புதிய செயலாளராக சம்பத் அவர்களை நியமனம் செய்தார்.
இந்த நிலையில் அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவரது வழக்கில்,அமமுகவை கட்சியாக பதிவு செய்ய 14 பேர் சார்பில் பதிவு விண்ணப்பத்துடன் சேர்த்து பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டது.ஆனால் தற்போது கட்சியாக பதிவு செய்ய பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்த 14 பெரும் கட்சியை விட்டு விலகியுள்ளோம்.எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.