இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய டிடிவி.தினகரனின் அமமுக!
- தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
- இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.
தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த மறைமுக தேர்தலில் அதிமுகவும், திமுகவும் முன்னணி இடங்களுக்கு போட்டிபோடும் வேளையில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி இரு ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது.
இதில் ஒன்று தூத்துகுடியை மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக அமமுக கட்சியை சேர்ந்த மாணிக்க ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் அமமுக கட்சியை சார்ந்தவர் கைப்பற்றியுள்ளார்.